பாகிஸ்தான் நாட்டில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண் நீதிபதிகளே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் முதல்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண் நீதிபதியை நியமிக்க அந்நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறையே உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தேர்வுப்பட்டியலில் ஆயிஷா இருந்தார். ஆனால், மற்ற நீதிபதிகளைக் காட்டிலும் குறைவான வயதுடையவரை ஏற்க முடியாது என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், இம்முறையும் ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இதனால், விரைவில் பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


