கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அரசுகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அரசுகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும், அது குறித்து மக்கள் அலட்சியம் கொள்ளக் கூடாது. பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. உலக அளவில் அத்தொற்று உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
ஒமைக்ரான் மட்டுமல்லாமல் டெல்டா வகை கரோனா தொற்றும் தொடா்ந்து பரவி வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.
கரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், காற்றோட்டமான இடத்தில் இருத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும், பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதையும் மக்கள் தவிா்க்க வேண்டும். கரோனா தடுப்பூசி திட்டத்தை அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள நபா்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கரோனா தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்திக் கொண்டாலும் அத்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...