விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒமைக்ரான்: தென் ஆப்பிரிக்க நாடுகள் மீதானபயணத் தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்

ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென் ஆப்பிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 6:53 pm

ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென் ஆப்பிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தைச் சோ்ந்த நாடுகளிலிருந்து விமானங்கள் வந்து செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த அவசரக்கால தடையை நீக்க ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இதையடுத்து, அந்த நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து விமானங்கள் செல்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பா் மாதம் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

அதனால் கலக்கமடைந்த பல்வேறு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் அடுத்தடுத்து தடை விதித்தன.

ஒமைக்ரான் வகை கரோனாவின் தன்மை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னா் நாடுகள் அவசரப்பட்டு பயணத் தடைகள் விதிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

எனினும், அதனை மீறி ஐரோப்பிய யூனியனும் தென் ஆப்பிரிக்கப் பிராந்திய நாடுகளுக்கு எதிராகப் பயணக் கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த நிலையில், ஒரு மாதத்துக்கும் மேல் அமலில் இருந்த அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.