/

பாகிஸ்தானில் மாவட்ட நீதிபதிகள் 15 பேருக்கு கரோனா

இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 15 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஜனவரி 2022, 11:18 am

DIN

இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 15 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானில் கரோனா 5ஆவது அலை மற்றும் ஒமைக்ரான் காரணமாக கடந்த சில நாள்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,678 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிக அதிக பாதிப்பு என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 15 நீதிபதிகள் மற்றும் 58 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிருமி நாசினி தெளிப்பதற்காக மாவட்ட நீதிமன்ற கட்டடங்களும் மூடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.