ரஷியாவில் தொடர்ந்து உயரும் பாதிப்பு: ஒரேநாளில் 63,205 பேருக்கு கரோனா
ரஷியாவில் ஒரேநாளில் புதிதாக 63,205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரஷியாவில் ஒரேநாளில் புதிதாக 63,205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார மையம் வெளியிட்ட தகவலில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63,205 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 17,528 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 11,108,191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 57,212 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. கரோனாவால் இன்று மேலும் 679 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,26,112ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று ஒரேநாளில் 23,045 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 10,023,622 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...