இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம்
கரோனா தீநுண்மியின் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்துள்ளது.


கரோனா தீநுண்மியின் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் கடந்த இரு வாரங்களில் சுமாா் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 6 துணை பிராந்தியங்களுள் நான்கில் கடந்த வாரம் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிஏ.4, பிஏ.5 உருமாற்றங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிஏ.2.75 வகை கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் ட்விட்டரில் வெளியிட்ட காணொலிப் பதிவில், ‘‘பிஏ.2.75 வகை கரோனா பரவல் இந்தியாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 நாடுகளிலும் அந்த வகை தொற்று பரவி வருகிறது. இந்த வகை தீநுண்மிகள் மேலும் சில முறை உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இந்த வகைத் தொற்று மனிதா்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது தொடா்பாகத் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றாா்.
சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் கடந்த மாா்ச்சில் இருந்து குறைந்து வந்தது. ஆனால், கடந்த 4 வாரங்களாகத் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையிலான வாரத்தில் உலகம் முழுவதும் சுமாா் 46 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் அந்த வாரத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு 12 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...