ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது மார்புப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தில் வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சாய்ந்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

இந்நிலையில், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் சுயநினைவை அபே இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து ஜப்பான் மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதனிடையே, அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 41 வயதான யமகாமி டெட்சுயாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய யமகாமி டெட்சுயா, முன்னாள் கடல்சார் தற்காப்புப் படையைச் சேர்ந்தவர் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது இணையதளத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட விடியோ வெளியாகி உள்ளது. அதனை ஜப்பானிய ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குற்றவாளி ஷின்சோ அபே அருகில் உள்ளான், திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஒடுகின்றனர்.

நீண்ட காலம் ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார். 

இந்தியாவுடன் அதிக நெருக்கத்தை காட்டி வந்த அபே, 2006, 2014, 2015, மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். 

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இது காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இதுபோன்ற தீங்கிழைக்கும் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கான எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். 

இந்த நேரத்தில், 'அன்புள்ள நண்பர்' ஷின்சோ அபே மீதான தாக்குதலால் 'ஆழ்ந்த மனவேதனை' அடைந்துள்ளதாகவும், அபேவைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com