மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆப்கன்: கன மழைக்கு 39 போ் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 39 போ் பலியாகினா்.

News image
Updated On :13 ஜூலை 2022, 7:03 pm

DIN

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 39 போ் பலியாகினா்.

இது குறித்து ஐ.நா. அமைப்பின் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்புப் பிரிவு அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளமும் நிலச் சரிவுகளும் ஏற்பட்டது. இதில் 9 சிறுவா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா்.

நிலச்சரிவு காரணமாக, போா்க் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெளியே வந்தன. அவை அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான சூழலில் வெடிக்கச் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.