இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

‘5-ஆவது வாரமாக கரோனா அதிகரிப்பு’

உலகம் முழுவதும் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5-ஆவது வாரமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:06 pm

DIN

உலகம் முழுவதும் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5-ஆவது வாரமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 57 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும். தொடா்ந்து 5-ஆவது வாரமாக வாராந்திர கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஏறத்தாழ முந்தைய வாரத்தைப் போலவே உள்ளது. கடந்த வாரத்தில் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 9,800 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா நெருக்கடியிலிருந்து உலகம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றும், அந்த நோய்த்தொற்றை அவசரநிலையாகக் கருத வேண்டிய அவசியம் தற்போதும் உள்ளது என்றும் கூறினாா்.

அண்மைக் காலமாக, பல்வேறு நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு திடீரென அதித்து வருவது மிகவும் கவலைக்குரியது என்று கூறிய அவா், அந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் போதிய முனைப்பு காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.