அமெரிக்காவில் விமானத்தை சாலையில் தரையிறக்கிய போதை விமானி கைது

அமெரிக்காவில் மதுபோதையில் சாலைக்கு நடுவே விமானத்தை தரையிறக்கியவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் விமானத்தை சாலையில் தரையிறக்கிய போதை விமானி கைது

அமெரிக்காவில் மதுபோதையில் சாலைக்கு நடுவே விமானத்தை தரையிறக்கியவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் ப்ளோரிடாவிலிருந்து மிசெளரி செல்வதற்கு தனது தனி விமானத்தில் பயணித்துள்ளார். 

இந்நிலையில் மிசெளரியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட அவர் தனது விமானத்தில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனது விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார். 

அதனைத் தொடர்ந்து தரையிறங்க வேண்டிய மிசெளரியிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  வாகனங்களுக்கு மத்தியில் அவரசமாக தரையிறக்கினார்.

இந்தத் தகவலை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் விமானத்திய இயக்கிய நபரை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேற்கொண்டு நடந்த விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் விமானத்தை இயக்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதுபோதையில் கவனக்குறைவாக விமானத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மதுபோதையில் விமானத்தை இயக்கி சாலையில் தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com