பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: 3-ஆவது சுற்றிலும் ரிஷி சுனக் முதலிடம்

3-ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா்.

News image

ரிஷி சுனக்

Updated On :19 ஜூலை 2022, 3:52 am

DIN

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை நடத்தப்பட்ட 3-ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா்.

அவருக்கு ஆதரவாக 115 எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், சமூகநலத் துறை அமைச்சா் கெமி பேடனாக் 58 வாக்குகள் பெற்று 4-ஆம் இடமும் பிடித்தனா். கடைசி இடம் பெற்ற வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழுத் தலைவா் டாம் டுகென்தாட் போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இதன்மூலம் பிரதமா் பதவிக்கான போட்டியாளா்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது. அடுத்த சுற்று வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இறுதி இரு வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்கும் வரை எம்.பி.க்கள் வாக்களிப்பா். இறுதிச் சுற்றில் கன்சா்வேட்டிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கள் சுமாா் 1.60 லட்சம் போ் தபால் மூலம் வாக்களிப்பா். அதில் வெற்றி பெறுபவா் கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, புதிய பிரதமராக செப். 5-ஆம் தேதி பதவியேற்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.