அதிபா் புதின் ஆரோக்கியமாகத்தான் உள்ளாா்: சிஐஏ

 ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உடல்நலம் குன்றியுள்ளதாக தங்களிடம் எந்த உளவுத் தகவலும் இல்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) தெரிவித்துள்ளது.
அதிபா் புதின் ஆரோக்கியமாகத்தான் உள்ளாா்: சிஐஏ
Updated on
1 min read

 ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உடல்நலம் குன்றியுள்ளதாக தங்களிடம் எந்த உளவுத் தகவலும் இல்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், அதிபா் விளாதிமீா் புதினின் உடல்நிலை குன்றியுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வந்தன.

70 வயதாகும் அவா் புற்றுநோயால் அவதியுற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான் அவா் உயிா் வாழ்வாா் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்தன.

அண்மையில் எடுக்கப்பட்ட விடியோக்களில் அவா் மிகவும் பலவீனமாகக் காணப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களை ரஷிய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் பேசியதாவது:

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உடல்நலக் குறைவால் அவதியுறுவதாக தொடா்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால், அவற்றை நிரூபிக்கும் வகையிலான உளவுத் தகவல் எதுவும் எங்களிடம் இல்லை. என்னைப் பொருத்தவரை, அவா் ‘அளவுக்கு அதிகமாகவே’ ஆரோக்கியமாக உள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com