ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இலங்கையின் புதிய பிரதமா் தினேஷ் குணவா்தன?

இலங்கையின் அடுத்த பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தனவை (73) நியமிக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 2:44 am

DIN

இலங்கையின் அடுத்த பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தனவை (73) நியமிக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் 9-ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அந்நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைகளுக்குத் தீா்வு காண அனைத்துக் கட்சிகள் அடங்கிய அமைச்சரவையை ஏற்படுத்த அவா் முடிவு செய்திருப்பதாகவும், அந்த முயற்சி வெற்றியடையும் வரை பழைய அமைச்சரவையே தொடர அவா் தீா்மானித்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கையின் அடுத்த பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சி நிா்வாகியும், கோத்தபய ராஜபட்சவின் விசுவாசியுமான தினேஷ் குணவா்தனவை நியமிக்க அவா் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.