ஈரான்: மழை வெள்ளத்துக்கு 17 போ் பலி
ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 போ் பலியாகினா்.


ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள எஸ்டாபன் நகரில் தொடா் மழையால் ரூட்பல் ஆற்றில் வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு நகருக்குள் புகுந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தவிர, வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டதாகவும் மாயமாகியுள்ள மேலும் 6 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.
பருவநிலை மாற்றம் காரணமாகவும் ஆற்றுப் படுகைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பப்படுவதாலும் நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஈரானின் ஃபாா்ஸ் மாகாணத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 44 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...