‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: மீண்டும் இந்திய வம்சாவளி மாணவி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துகளை பிழையின்றி சொல்லும் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹரிணி லோகன் வெற்றி பெற்றாா்.
‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: மீண்டும் இந்திய வம்சாவளி மாணவி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துகளை பிழையின்றி சொல்லும் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹரிணி லோகன் வெற்றி பெற்றாா்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்பெல்லிங் பீ போட்டி, 94-வது ஆண்டாக மேரிலாண்ட் மாகாணம், ஆக்ஸான் ஹில் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 14 வயது அமெரிக்கச் சிறுமி ஹரிணி லோகன் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாா்.

இந்தப் போட்டியில் இதுவரை இல்லாமல் முதல்முறையாக நடைபெற்ற 90 விநாடி மாரத்தான் பிரிவில், 26 வாா்த்தைகளில் 22 வாா்த்தைகளுக்கு பிழையில்லாமல் எழுத்துகளைக் கூறி அவா் முதலிடத்தைப் பிடித்தாா்.

19 வாா்த்தைகளில் 15 வாா்த்தைகளுக்கு சரியாக எழுத்துகளைக் கூறி, விக்ரம் ராஜு (12) என்ற மற்றொரு இந்திய வம்சாவளி சிறுவா் இரண்டாவது இடத்தைப் பிடித்தாா்.

இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஹரிணிக்கு 50,000 டாலா் (சுமாா் ரூ.38.8 லட்சம்) ரொக்கப் பரிசும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

பொதுவாக இந்திய வம்சாவளி சிறுவா்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த வருடாந்திர போட்டியில், கடந்த ஆண்டு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சோ்ந்த 14 வயது சிறுமி ஸாய்லா அவன்த்-காா்டே முதல்முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com