தற்கொலை தாக்குதல் நடத்துவேன்: இம்ரான் கட்சி எம்.பி. மிரட்டல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு தீங்கு விளைவித்தால் ஆட்சியாளா்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன் என எம்.பி. ஒருவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு தீங்கு விளைவித்தால் ஆட்சியாளா்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன் என எம்.பி. ஒருவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சாா்பில் கராச்சி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் அதாவுல்லா. இம்ரான் கானின் விசுவாசியான இவா், ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில், இம்ரான் கானுக்கு தீங்கு விளைவிக்கப்பட்டால் ஆட்சியாளா்கள் இருக்க மாட்டாா்கள். அவா்கள் மீது தற்கொலைத் தாக்குதலை நானே நடத்துவேன். இதே வழியில் ஆயிரக்கணக்கான தொண்டா்களும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அதாவுல்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலா் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் இம்ரான் கான் தோல்வியுற்றதையடுத்து, பிரதமா் பதவியிலிருந்து அவா் அகற்றப்பட்டாா். அன்றுமுதல் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இம்ரான் கான் தொடா்ந்து கூறி வருகிறாா். அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...