சமீபத்தில் வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது போர் விமானங்களை வடகொரியாவின் வான்வெளியில் இயக்கியுள்ளது.
வட கொரிய வான்வெளியில் தென்கொரியாவின் எஃப்-35 மற்றும் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 20 போர் விமானங்கள் மஞ்சள் கடலின் மேலே பறந்துள்ளன. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்காக இந்த பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் உறுதியான கூட்டமைப்பு வடகொரியாவின் எந்த ஒரு அச்சுறுத்தறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வடகொரியா குறுகிய தொலைவில் சென்று தாக்கக் கூடிய 8 ஏவுகணைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே அந்த நாட்டின் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்தது பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!

சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர்!

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்

ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

