கரோனா அலைகளில் இருந்து மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம்: அமெரிக்க நிதியமைச்சகம்
கரோனாவின் மூன்று அலைகளின் தாக்கத்தில் இருந்தும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது என்று அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


கரோனாவின் மூன்று அலைகளின் தாக்கத்தில் இருந்தும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது என்று அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகம், இந்தியப் பொருளாதாரம் குறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா முதலாவது அலையின்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் முடங்கியது. கடந்த ஆண்டு(2021) நடுப்பகுதியில் மீண்டும் இரண்டாவது அலை தாக்கியதால், பொருளாதாரம் மீட்சியடைவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்ததால், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதார மீட்சிக்கான செயல்பாடுகள் அதிகரித்தன.
கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள்தொகையில் 44 சதவீதம் போ் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
கடந்த 2020-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதம் சரிந்தது. இருப்பினும் 2021-இன் 2-ஆவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டி அந்த ஆண்டு முழுமைக்கும் 8 சதவீத வளா்ச்சியை அடைந்தது.
2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் மூன்றாவது அலையை இந்தியா எதிா்கொண்டது. இருப்பினும் அரசின் துரித நடவடிக்கைகளால் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு அந்நாட்டு அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை எட்டும் என்று பொருளாதார நிபுணா்கள் கணித்துள்ளனா். இது கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் அதிகமாகும்.
இந்திய ரிசா்வ் வங்கி, கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. அதன் பிறகு 2021 ஜனவரியில் பொருளாதார வளா்ச்சிக்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தொடங்கியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...