தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

’இனி அவர் தேவையில்லை’: திருநங்கையாக மாறும் எலான் மஸ்கின் மகன்

எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்  திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
Updated On :21 ஜூன் 2022, 11:31 am

DIN

எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்  திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக செல்வந்தர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் எலான் மஸ்க்கிற்கு 7 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் பிறப்பால் ஆணாகப் பிறந்தாலும் நாளடைவில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண் தன்மையை உணர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றியதோடு பாலினத்தில் பெண் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், பாலின மாற்றம் தொடர்பாக சமர்ப்பித்த கோப்புகளில்  ‘இனி என் உயிரியல் தந்தையுடன்(எலான் மஸ்க்) எவ்விதத்திலும் தொடர்பில் இருக்க விரும்பவில்லை என்பதால் அவர் எனக்குத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் தரப்பிலிருந்து இதை மறுக்கும்படியாக எந்த பதிலும் வரவில்லை.

முன்னதாக, அவர் டிவிட்டரில் ‘என் குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.