
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைன் மீட்புப் பணியில் இந்திய விமானப்படை விமானம்?
ரஷ்யா - உக்ரைன் நாடுகளிக்கிடையே நேற்று முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று ரஷிய ராணுவத்தினர் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.