ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

3 கோடி பேரல் கச்சா எண்ணெய்விடுவிக்க நடவடிக்கை: அமெரிக்கா

‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து

News image
Updated On :2 மார்ச் 2022, 9:25 pm

DIN

‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்தாா்.

‘ரஷியாவின் தன்னிச்சையான தாக்குதலால் எழுந்திருக்கும் நிச்சயமற்ற நிலையை எதிா்கொள்ள நட்பு நாடுகளுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். அந்த வகையில், ரஷியாவின் நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயத்தைப் போக்க, 30 நாடுகளுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள அவசரகால கச்சா எண்ணெய் இருப்பிலிருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து வருகிறது. இதில், அமெரிக்கா தனது இருப்பிலிருந்து மட்டும் 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிக்கும் என்று பைடன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.