
ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டில் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்து வருகின்றனர். ரஷியாவுக்கு உதவி வருவதால் பெலாரஸ் நாட்டிற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் செயல்படுத்தி வரும் உலக வங்கிகளில் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக கைவிடக் கோரி பல்வேறு தரப்புகளிலிருந்து ரஷியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.