உக்ரைன் அணுமின் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல்: வெடிக்கும் அபாயம்!

உக்ரைனினுள்ள அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
தீப்பிடித்து எரியும் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி
தீப்பிடித்து எரியும் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி

உக்ரைனினுள்ள அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷிய ராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவதால், அணுமின் நிலையம் தீப்பிவித்து எரிந்து வருவதாகவும், இதனை உடனடியாக அணைக்காவிட்டால், செர்னோபில் உலையை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். 

நேட்டோ கூட்டமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவப்படை நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  அனைத்து திசைகளிலும் ரஷிய ராணுவம் முன்னேறி வருவதன் விளைவாக அந்நாட்டின் தலைநகரான கீவ், மிகப்பெரிய நகரான கார்கீவ், கெர்சன், செர்னோபில் போன்ற முக்கிய நகரங்களை ரஷியா முழுமையாக கைப்பற்றியது.

ரஷியாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ரஷிய ராணுவம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபரோஸ்ஸியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துவருகிறது. இதனை உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்  டிமிட்ரோ குலேபா உறுதிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, சபரோஸ்ஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே உலையில் ஒருபகுதியில் தீப்பிவித்து எரிந்து வருகிறது. இதில் விபத்து நேரிட்டால் செர்னோபில் உலையை விட விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ரஷியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். தீயணைப்புப் படையினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com