47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தரம் குறைந்த கோதுமையை தந்த பாகிஸ்தான்...இந்தியாவை பாராட்டிய தலிபான்

மனிதாபிமான அடிப்படையில் இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வாகனம் 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிக் கொண்டு அட்டாரியை விட்டு ஜலாலாபாத்துக்கு சென்றுள்ளது.

News image
தலிபான் (கோப்புப்படம்)
Updated On :5 மார்ச் 2022, 10:27 am

DIN

தரம் குறைந்த கோதுமையை அளித்த பாகிஸ்தானை விமரிசிக்கும் அதேவேளையில் நல்ல தரமான கோதுமையை இந்தியா அளித்திருப்பதாக தலிபான் புகழ்ந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் நிலவிவருகிறது. 

பாகிஸ்தான் அளித்த கோதுமையின் தரம் குறித்து தலிபான் அலுவலர் ஒருவர் புகார் தெரிவிப்பது போன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல்ஹக் ஒமேரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் அளித்துள்ள கோதுமை சாப்பிட முடியாத நிலையில் உள்ளது என தலிபான் அலுவலர் தெரிவித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

நல்ல தரமான கோதுமையை அளித்ததால் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் ட்விட்டரில் நன்றி தெரிவித்துவருகின்றனர். ஹம்துல்லா அர்பாப் என்ற ட்விட்டர் பயனாளி, "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி. இரு மக்களுக்கிடையேயான நட்புணர்வு என்றென்றும் தழைக்கட்டும். ஜெய் ஹிந்த்" என பதிவிட்டுள்ளார்.

நஜிப் ஃபர்ஹோடிஸ் என்பவர், "ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழங்கிய கோதுமை பயன்படுத்த முடியாத அளவு கெட்டுப்போயுள்ளது. இந்தியா எப்போதும் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு மத்தியில், பாகிஸ்தான் கோதுமை குறித்து விமரிசித்த தலிபான் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா கடந்த மாதம் முதல் கோதுமை அளித்துவருகிறது.

மனிதாபிமான அடிப்படையில் இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வாகனம் 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிக் கொண்டு அட்டாரியை விட்டு ஜலாலாபாத்துக்கு சென்றுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.