47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகன்தான் வேண்டும்; பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image
மகன்தான் வேண்டும்; பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற தந்தை
Updated On :8 மார்ச் 2022, 7:44 am

PTI


லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானின் மியான்வாலி பகுதியில், கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதிதான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த ஊராகும்.

ஷாஷ்சாயிப் கான் - பாத்திமா தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது குறித்து அறிந்த கான், தனது மனைவி மற்றும் மகளை தொடர்ந்து வசைபாடி வந்துள்ளார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு போனவர் ஞாயிறன்றுதான் வந்தார். முதலில் என்னை கடுமையாக திட்டினார். பிறகு குழந்தையை சபித்தார். திடீரென துப்பாக்கியை எடுத்து குழந்தையை நோக்கிச் சுட்டார் என்கிறார் கண்ணீருடன்.

எனது கணவர் ஆரம்பத்திலிருந்தே மகன்தான் வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்காக இப்படி ஒரு குற்றத்தை செய்வார் என்று யாருமே நினைக்கவில்லை என்று கூறினார். இது குறித்துகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.