
உக்ரைன் நாட்டின் லிவிவ் நகரின் மீது ரஷிய ராணுவத்தினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை லிவிவ் மாகாண ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே தலைநகர் கீவ், கார்கீவ், கெர்சன் ஆகிய நகரங்களை ரஷிய ராணுவம் முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், லிவிவ் நகரத்திலுள்ள ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கெனவே ஒக்திர்கா நகரத்திலுள்ள ராணுவ தளம் மீது ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது லிவிவ் நகரிலுள்ள மேற்கு ராணுவ தளம் மீது ரஷிய போர் விமானங்கள் இன்று பிற்பகல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் 35 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.