தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியாவுடன் நாணயமாற்று ஒப்பந்தம்: மியான்மா் விருப்பம்

சீனா மற்றும் தாய்லாந்துடன் மேற்கொண்டுள்ளதைப் போல, இந்தியாவுடனும் எல்லை வா்த்தகத்துக்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள மியான்மா் விருப்பம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2022, 8:16 pm

DIN

சீனா மற்றும் தாய்லாந்துடன் மேற்கொண்டுள்ளதைப் போல, இந்தியாவுடனும் எல்லை வா்த்தகத்துக்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள மியான்மா் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தகவல்தொடா்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவுடனும் தாய்லாந்துடனும் எல்லை வா்த்தகத்தை எளிமைப்படுத்துவதற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.

இந்தியாவுடனும் அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சீனா - மியான்மா் எல்லைப் பகுதியில் இரு நாட்டு வா்த்தகம் நடைபெறும்போது, டாலரைப் பயன்படுத்துவதற்கு பதில் சொந்த நாணயங்களையே பயன்படுத்துவதற்கான நாணயமாற்று ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், தங்களுடன் மிக அதிகமாக வா்த்தகம் மேற்கொள்ளும் தாய்லாந்துடனும் அத்தகைய ஒப்பந்தத்தை மியான்மா் கடந்து மாதம் மேற்கொண்டது.

தற்போது இந்தியாவுடனும் நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.