உக்ரைன் மீது படையெடுத்த விவகாரத்தில் நட்பு நாடான ரஷியாவை காப்பாற்ற சீனா முயற்சி செய்தால் அதற்கு விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கவுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் இணையம் வழியாக நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு முதல்முறையாக இரு நாட்டு தலைவர்கள் தொலைப்பேசி மூலம் பேச திட்டமிட்டிருந்தனர். இதில், ரஷிய மீது தடைகள் விதித்தப்பட்டுவரும் விவகாரத்தில் சீனாவிடம் அமெரிக்கா தனது மாற்று கருத்துகளை தெரிவிக்கவுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், "இந்த விவகாரத்தில் சீனா அதிபர் ஷி எங்கு நிற்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. வர்த்தக பிரச்னைகள், சர்வதேச விநியோகச் சங்கிலிகள் பற்றி விவாதிக்கப்படும்" என்றார்.
ஆனால், ரஷியாவுக்கு அழுத்தம் தருவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதில், ரஷியாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளை ஒருங்கிணைப்பதில் பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். உக்ரைனுக்கு பல்வேறு விதமான உதவிகளை மேற்குலக நாடுகள் அளித்துவருகிறது.
ஆனால், ரஷியாவை கண்டிக்க சீனா மட்டும் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனிடையே, ரஷியாவுக்கு நிதி மற்றும் ராணுவ உதவியை சீனா வழங்கிவிடுமோ என அமெரிக்க அச்சம் கொண்டுள்ளது. அமெரிக்க, சீனா நாடுகளுக்கிடையே வர்த்தக உலகில் மோதல் நடைபெற்றுவரும் நிலையில், இது மேலும் பிரச்னையை கிளப்பிவிடுமோ என அஞ்சப்படுகிறது.
ரஷியாவுக்கு உதவி செய்திடும் பட்சத்தில் சீன வங்கிகள் மற்றும் நாணயத்தின் மீது மேற்குலக நாடுகள் தடைகள் விதிக்கலாம். இதன் காரணமாக, உலக சந்தை பெரும் மோதலுக்குள்ளாகலாம்.
பைடன், ஷி ஆகியோருக்கிடையே நடைபெறவுள்ள தொலைப்பேசி உரையாடலின்போது, சீனா மீது தடை விதிக்கப்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுக்குமா என்பதற்கு உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், "ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்க எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும். அதற்கு விலை கொடுக்க நேரிடும் என சொல்ல நாங்கள் தயங்க மாட்டோம். இதை பைடன் உறுதி செய்வார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

