புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை

மோசடி வழக்கு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :22 மார்ச் 2022, 6:59 pm

மோசடி வழக்கு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ரஷிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, ‘ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை’ என்ற அமைப்பை உருவாக்கி அதிபா் புதின் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்தாா். புதின் அரசின் ஊழல்களை விடியோ வாயிலாக அவா் வெளியிட்டது புதினுக்கு பெரும் நெருக்கடியை அளித்தது.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளான அலெக்ஸி நவால்னி, சிகிச்சைக்காக ஜொ்மனிக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கும் புதின் அரசே காரணம் என அவா் குற்றம்சாட்டினாா். ஜொ்மனியில் ஐந்து மாத சிகிச்சைக்குப் பின்னா் 2021, ஜனவரி மாதம் அவா் ரஷியா திரும்பினாா். பழைய வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட நிலையில், அதன் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா். பரோல் விதிமீறல் வழக்கில் அவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது அறக்கட்டளை பல ஆண்டுகளாக திரட்டிய நிதியை நவால்னி மோசடி செய்ததாகவும், முந்தைய நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதியை அவமதித்ததாகவும் அவா் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1.2 மில்லியன் ரூபிள் (11,500 டாலா்) அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.