இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலங்கை: ராணுவப் பாதுகாப்பில் பெட்ரோல் நிலையங்கள்

இலங்கையில் அரசு நடத்தும் பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்புக்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:45 am

DIN

இலங்கையில் அரசு நடத்தும் பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்புக்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சீா்குலைவை எதிா்கொண்டுள்ள இலங்கையில் எரிபொருளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் எரிபொருள் நிலையங்கள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது அங்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது. வரிசையில் நின்ற முதியவா்கள் இருவா் வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்த சோகமும் அங்கு நிகழ்ந்துள்ளது.

உணவுப் பொருள்களின் அதீத விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு, பல மணி நேரம் நீடிக்கும் மின்தடை ஆகியவை இலங்கை மக்களைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. அரசுக்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் மோதல்களைத் தவிா்ப்பதற்காகவும் பாதுகாப்புக்கும் ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக அந்நாட்டு எரிபொருள் துறை அமைச்சா் காமினி லொகுகே கூறுகையில், ‘பெட்ரோல் நிலைய வாசல்களில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனா். எனவே, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புக்கு ராணுவ வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் ஆயுதம் எதையும் வைத்திருக்க மாட்டாா்கள். மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் எரிபொருள் கிடைப்பதையும் அவா்கள் கண்காணிப்பாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.