புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏவுகணை பரிசோதனை: வட கொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடை

கொரிய தீபகற்பத்தில் அமைதியைச் சீா்குலைக்கும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது.

News image
Updated On :25 மார்ச் 2022, 10:04 pm

DIN

கொரிய தீபகற்பத்தில் அமைதியைச் சீா்குலைக்கும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. அதையடுத்து, அந்நாட்டு நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியது. தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டுமென வட கொரியா தொடா்ந்து கோரி வருகிறது.

அதே வேளையில், அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற நோக்கிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் நோக்கிலும் வட கொரியா செயல்பட்டு வருகிறது. ஏவுகணைகளை அந்நாடு அடிக்கடி சோதித்து வருகிறது. இது தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில், ‘ஹவாசங்-17’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. அந்த ஏவுகணை அதிகபட்சமாக 6,248 கி.மீ. உயரம் வரை பறந்து 1,090 கி.மீ. தொலைவைக் கடந்து கடலில் விழுந்ததாக வட கொரியாவின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது அதிநவீனத்துவம் கொண்டதாக அறியப்படுகிறது. அதன் மூலமாக அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் வட கொரியாவால் தாக்க முடியும். வட கொரியாவின் அணு ஆயுதத் திறனை உலகுக்கு எடுத்துரைக்கவே ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கூடுதல் தடைகள்: வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்டு ஆஸ்டின், ஜப்பான், தென் கொரியா நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா். 3 நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அவா்கள் உறுதியேற்றனா்.

வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய 5 நிறுவனங்கள், தனிநபா்கள் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்தது. நடப்பாண்டில் மட்டும் வட கொரியா 12 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.