பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு
பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.


பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை (மாா்ச் 31) தொடங்கும்.
அதனைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...