மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் தன் முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image

மெலிண்டாவுடன் பில் கேட்ஸ்

Updated On :3 மே 2022, 5:56 am

பில்கேட்ஸ் தன் முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தன் மனைவி மெலிண்டாவைப் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றார். 30 ஆண்டு கால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டதாகவும் இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு எனக் கூறியிருந்தார்.

மேலும், பில்கேட்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையில் விவாகரத்துக்குப் பின்பும் மெலிண்டா பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த பில் கேட்ஸ் ‘திருமண வாழ்வு சிக்கலானது. அதை ஆராய்வது வீண். விவாகரத்து தாக்கத்திலிருந்து இருவரும் மீண்டு வருகிறோம். எனக்கு வேறொரு திருமணத்தைச் செய்ய  விருப்பமில்லை. மீண்டும் மெலிண்டா கேட்ஸை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அவர் என்னைத் திருமணம் செய்வாரா எனத் தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

பில் கேட்ஸ் மெலிண்டா தம்பதியருக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.