விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாள விமான நிலையத்தில் மர்ம பொருள்: பயணிகள் வெளியேற்றம்

நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

News image

நேபாள விமான நிலையத்தில் மர்ம பொருள்: பயணிகள் வெளியேற்றம் (கோப்புப்படம்)

Updated On :4 மே 2022, 7:37 am

நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

நேபாள விமான நிலைய அதிகாரிகளுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலையத்தின் உள்ளூர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்விடுக்கப்பட்டது.

உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கைத் தகவல் கொடுக்கப்பட்டு மர்ம பொருளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அழைப்பு விடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.