எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கையில் நிட்டம்புவு பகுதியில் துப்பாக்கிச் சூடு; பதற்றம்

இலங்கையில் ராஜபட்சவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
இலங்கையில் நிட்டம்புவு பகுதியில் துப்பாக்கிச் சூடு; பதற்றம்
Updated On :9 மே 2022, 12:26 pm

DIN


கொழும்பு; இலங்கையில் ராஜபட்சவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில், மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில், இலங்கை அதிபர் இல்லம் அருகே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறையினருடன் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடுதவதைத் தடுக்கும் வகையிலும், அமைதியை ஏற்படுத்தவும் ராணுவ தளபதி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

இதற்கிடையே, நிட்டம்புவு பகுதியில் ராஜபட்ச ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை விரட்ட காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால், இலங்கையின் முக்கிய நகரங்களில் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.