எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளார்.

News image
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா
Updated On :9 மே 2022, 12:27 pm

DIN


கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளார்.

மகிந்த ராஜபட்ச, பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மகிழ்ந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இலங்கை மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.