காவல் துறையுடன் மோதல் - பேருந்துகள் எரிப்பு: பிரதமர் அலுவலகத்தில் முகாமிட்டுள்ள மக்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பேருந்துகள் எரிப்பு, அரசு வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தார். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மகிந்த ராஜபட்ச தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிக்கும் நோக்கத்தில் திரிகோணமலை கடற்படை தளத்தில் தனி டெலிகாப்டர் மூலம் தஞ்சம் அடைந்தார். இதனையறிந்த மக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று தலைநகர் கொழும்புவில் பிரதமர் இல்லம் அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலைக்க காவலர்கள் குவிக்கப்பட்டனர். நேற்று பிரதமர் இல்லம் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிக அளவிலாக காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிரதமர் இல்லம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். பேருந்தை கவிழ்த்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...