செஸ் ஒலிம்பியாட்: பங்கேற்க முயற்சிக்கும் ரஷியா

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷிய அரசு முறையீடு செய்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷிய அரசு முறையீடு செய்துள்ளது. 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், செஸ் தொடரில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து மேற்கு நாடுகள் ரஷியா மீதான தடைகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் விளையாட்டுத் துறையில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவின் பெயர், கொடி பயன்படுத்த பிஃபா அமைப்பு தடை விதித்துள்ளது.

ரஷிய கிளப் அணிகள் விளையாட ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. மேலும், உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ரஷியா, பெலராஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்ய அரசு முறையீடு செய்துள்ளது. 

மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com