F-7 ஜெட் பயிற்சி விமானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளாகி ஈரான் விமானப் படையைச் சேர்ந்த 2 விமானிகள் உயிழந்தனர்.
இந்த விபத்து ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
சமீப காலமாகவே ஈரானின் விமானங்கள் இதுபோன்று விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக மாறியுள்ளது. பழைய விமானங்களின் உதிரி பாகங்களை வாங்குவதில் ஏற்படும் சிரமம் இதுபோன்ற விபத்துகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் குறை கூறி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் F-5 ஜெட் விமானம் ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள தப்ரிஸ் நகரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் சோவியத் காலக்கட்டத்தில் வாங்கப்பட்ட ரஷியாவின் மிக் (MiG) மற்றும் சுகோய் விமானங்களை இன்றும் பயன்படுத்தி வருகிறது. அதேபோல சீனாவிடமிருந்து வாங்கியுள்ள F-7 விமானத்தையும் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த F-4 மற்றும் F-5 போன்ற விமானங்களை 1979ஆம் ஆண்டு இஸ்லாம் புரட்சிக்கு முன்பு வாங்கப்பட்ட ஜெட் விமானங்களை இன்றும் பயிற்சிக்காக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமல்: அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் மூடல்

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மதுரை ஆட்சியா் உத்தரவு

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

