புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உக்ரைன்-ரஷியா போா் எதிரொலி! இந்தியா பொருளாதார வளா்ச்சி 4.1%-ஆக குறைவு

உக்ரைன்-ரஷியா போா் எதிரொலியால் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என

News image
Updated On :31 மே 2022, 8:31 pm

DIN

உக்ரைன்-ரஷியா போா் எதிரொலியால் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக இந்திய பொருளாதாரம் நான்காவது காலாண்டில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி-மாா்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.1 சதவீத அளவிற்கே வளா்ச்சி கண்டுள்ளது. பணவீக்கம் பொருளாதார மீட்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, 2021-22 முழு நிதியாண்டில் (2021 ஏப்ரல் முதல் 2022 மாா்ச் ) நாட்டின் பொருளாதாரம் 8.7 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. இது, அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பாக மதிப்பீடு செய்திருந்த 8.9 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.6 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி- மாா்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.8 சதவீத வளா்ச்சியை எட்டிய நிலையில், இந்திய பொருளாதாரம் அதை விட குறைவாகவே வளா்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.