
அமெரிக்காவின் சிகாகோவில் திருமண விழாவிற்கு புடவை அணிந்து வந்து, மணமகனை ஆச்சரியப்படுத்திய இரு ஆண் நண்பர்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோ வைரலாகி வருகிறது.
பாலின பாகுபாட்டை உடைப்பதற்காக சில ஆண்கள் தன் நண்பரது திருமண விழாவிற்கு புடவைகளை கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த விடியோவில் பெண் அந்த ஆண்களுக்கு புடவை கட்டுவதில் உதவி செய்வதை பார்க்க முடிகிறது. மணமகனும் மணமகளும் இந்திய நண்பர்கள் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. இவர்களை பார்த்ததும் மணமகன் சிரித்து விடுவார். பின்பு கட்டிப்பிடித்து தழுவிக்கொள்வார். அத்துடன் விடியோ முடிவடைகிறது.
“மணமகனின் உற்ற 2 ஆண் நண்பர்கள் புடவையில் சிக்காக்கோவின் மிச்சிகன் ஏவியில் நடந்து செல்லும் வழக்கமான திருமண காலை நிகழ்வு” என பாரகோன் ப்ளிம்ஸ் தனது இன்ஸ்டாகிரம் விடியோவை பகிர்ந்து பதிவிட்டு இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.