தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனுக்கு போர் பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலியா?

ரஷியாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க  ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 6:57 am

DIN

ரஷியாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க  ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

மேலும், ரஷியாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ‘உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு போர் பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.