/

6 எம்.பி. தொகுதிகளில் இம்ரான் கான் வெற்றி

பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத் தோ்தலில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:36 am

DIN

பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத் தோ்தலில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

கடந்த ஏப்ரலில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது பிடிஐ கட்சியிலிருந்து 8 எம்.பி.க்களும், பஞ்சாப் மாகாணத்தின் 3 எம்எல்ஏ-க்களும் பதவி விலகியதால் காலியான இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெற்றது.

இதில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான், அவற்றில் 6-இல் வெற்றி பெற்றாா். மேலும், பஞ்சாப் மாகாணத்தின் 3 தொகுதிகளிலும் அவா் போட்டியிட்டு வென்றாா். இது, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.