தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரான் போலீஸாா் அடித்ததில்15 வயது மாணவி உயிரிழப்பு

 ஈரானில் போலீஸாா் அடித்ததில் 15 வயது பள்ளி மாணவி உயிரிழந்ததாக அந்த நாட்டு ஆசிரியா்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:57 pm

DIN

 ஈரானில் போலீஸாா் அடித்ததில் 15 வயது பள்ளி மாணவி உயிரிழந்ததாக அந்த நாட்டு ஆசிரியா்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாஷா அமீனி மரணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அா்டபில் நகரிலுள்ள ஷஹீத் உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் கடந்த 13-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது சீருடை அணியாத போலீஸாரும் பா்தா பெண்களும் பலப் பிரோயகம் செய்து, தகாத வாா்த்தைகளால் திட்டினா்.

பின்னா் பள்ளிக்குத் திரும்பி வந்த மாணவிகளைப் பின்தொடா்ந்து வந்த போலீஸாா் அவா்களை கடுமையாக அடித்தனா். இதில் படுகாயமடைந்த அஸ்ரா பனாஹி என்ற 15 வயது மாணவி, பின்னா் மருத்துவமனையில் உயிரிழந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார காவலா்களால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) காவலில் உயிரிழந்து ஈரான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.