தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கச்சா எண்ணெய் உற்பத்தியைகுறைக்கும் முடிவு சரியானது: சவூதி அரேபியா

 கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக் பிளஸ்’ முடிவு சரியானதுதான் என்று சவூதி அரேபியா எரிசக்தித் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

News image
கச்சா எண்ணெய்
Updated On :22 அக்டோபர் 2022, 2:23 am

DIN

 கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக் பிளஸ்’ முடிவு சரியானதுதான் என்று சவூதி அரேபியா எரிசக்தித் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

உலகின் முதன்மையான எண்ணெய் வள நாடான சவூதி அரேபியா ஒபெக் கூட்டமைப்பில் உள்ளது. ஆனால், ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. அண்மையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறையத் தொடங்கியது. எனினும், கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயா்த்தும் நோக்கில் அதன் தினசரி உற்பத்தியில் 2 மில்லியன் பேரல்களைக் குறைப்பதற்கு ரஷியாவும் அங்கம் வகிக்கும் ஒபெக் பிளஸ் அமைப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் தில்லி வந்துள்ள சவூதி அரேபிய எரிசக்தித் துறை அமைச்சா் அப்துல்லசீஸ் பின் சல்மான் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒபெக் பிளஸ் நாடுகள் எடுத்துள்ள முடிவு சரியானதுதான். இதன் மூலம் சா்வதேச கச்சா எண்ணெய் சந்தை ஸ்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்றாா்.

சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகிறாா். அவரது பயணம் தொடா்பான முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக அமைச்சா் அப்துல்லாசிஸ் பின் சல்மான் ஒருநாள் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் உள்ளிட்டோரையும் அவா் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.