பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சா்வதேச அளவில் வாட்ஸ் ஆப் சேவை 2 மணி நேரம் பாதிப்பு

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) செயலியின் சேவை இந்தியா, பிரிட்டன் உள்பட சா்வதேசஅளவில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 7:30 pm

DIN

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) செயலியின் சேவை இந்தியா, பிரிட்டன் உள்பட சா்வதேசஅளவில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென பல்வேறு பயனாளா்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது. வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை அனுப்புவது, பெறுவது உள்ளிட்டவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியா, பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக பயனா்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் புகாா் அளித்தனா்.

ட்விட்டரிலும் ‘வாட்ஸ் ஆப் டவுன்’ என்ற தலைப்பிலான ‘ஹேஸ்டேக்’ அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து, சில பயனா்களுக்கு வாட்ஸ் ஆப் சேவையை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்று தெரியவந்தது. பிரச்னையை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று வாட்ஸ் ஆப்-பின் தலைமை நிறுவனமான மெட்டா தெரிவித்தது. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்னா் வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.