
கரோனா ஆபத்து குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழலில் இருப்பதுபோல் தெரிவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
"ஒமைக்ரானின் வெவ்வேறு துணை வகைகளால் உலகம் முழுவதும் வெவ்வேறான காலகட்டத்தில் எதிர்காலத்தில் தொற்றுநோய் அலைகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் தனது முந்தைய எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
கரோனா தொற்று மேலும் பரவுகிறது. அது மாற்றமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது என அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.