ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பிரிட்டன் கொடியைத் தயாரிப்பதில் சீனா தீவிரம்: காரணம் இதுதான்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த சில நிமிடங்களிலேயே பிரிட்டன் கொடியினை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் சீன நிறுவனங்களுக்கு அதிக அளவில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த சில நிமிடங்களிலேயே பிரிட்டன் கொடியினை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் சீன நிறுவனங்களுக்கு அதிக அளவில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு பிரிட்டன் நாட்டின் கொடியினை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன. இந்த ஆர்டர்களினால் கடந்த சில தினங்களாகவே 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களது மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பிரிட்டன் நாட்டின் கொடி மற்றும் எலிசபெத் ராணி உருவம் பொறித்த கொடியினை  தயாரிக்கும் பணியில் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் அந்த நிறுவனம் 5 லட்சம் கொடிகளை தயாரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் ஃபேன் ஐபிங் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடிகளை இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்திற்கு செல்பவர்களும், சிலர் தங்களது வீடுகளில் கொடியினை ஏற்றி துக்கம் அனுசரிக்கவும் வாங்கிச் செல்கின்றனர். இந்தக் கொடியின் அளவு 21 செ.மீ-ல் இருந்து 150 செ.மீ-ஆக உள்ளது. கொடி ஒன்றின் விலை ஒரு டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடியினை ஆர்டர் கொடுத்தவர்கள் நேரடியாக கொடி தயாரிக்கும் இடத்திற்கே வந்து தங்களது ஆர்டரை பெற்றுச் சென்றதாகவும் அந்த நிறுவனத்தின் சார்பில் கூறப்படுகிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்த நிறுவனம் ராணி எலிசபெத் இறப்பதற்கு முன்னதாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கொடியினைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.