சென்சார் கொண்ட டி-ஷர்ட்: மூச்சு விடுதல், இதயத் துடிப்புகளை அளவிடலாம்

மிக விலை குறைந்த சென்சார் கருவிகளை டி-ஷர்ட் மற்றும் முகக்கவசங்களில் எம்பட் செய்துவிட்டால், அதன் மூலம் மூச்சு விடுதல் மற்றும் இதயத் துடிப்பு, அம்மோனியா அளவுகளை அளவிடும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: மிக விலை குறைந்த சென்சார் கருவிகளை டி-ஷர்ட் மற்றும் முகக்கவசங்களில் எம்பட் செய்துவிட்டால், அதன் மூலம் மூச்சு விடுதல் மற்றும் இதயத் துடிப்பு, அம்மோனியா அளவுகளை அளவிடும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உடற்பயிற்சி, உறங்குவது போன்ற சமயங்களில், இந்த டி-ஷர்ட்டுகளை அணிந்து கொண்டால், அதனை அணிந்திருப்பவரின் இதயத் துடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மிக விலை குறைந்த சென்சார் கருவிகளை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எம்ப்ராயட்ரி இயந்திரங்கள் மூலம் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, முகக்கவசத்திலும் இந்த சென்சார் கருவிகளைப் பொருத்தி, மூச்சு விடும் எண்ணிக்கையை அறியவும், தொழிற்சாலைகளில் விஷவாயுக் கசிவைத் தடுக்க அம்மோனியா அளவைக் கண்காணிக்கவும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சிக்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் வாஷிங்டனில் அமைந்துள்ள இம்பீரியல் பல்கலையின் பையோ இஞ்ஜினியரிங் துறை பிஎச்டி மாணவர் ஃபாஹத் அல்ஷாபௌனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com