பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இலங்கையைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பிரச்னை உருவாகலாம் என்பதால், அந்நாட்டுக்குச் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மூன்றாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

மூன்றாம் நிலை எச்சரிக்கை என்றால், அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தால் அது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக அர்த்தமாகும்.

மேலும், அந்த அறிவுறுத்தலில், பாகிஸ்தானுக்குச் சென்றாலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளுக்கு அருகிலுக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையும் நிலவுவதால், நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.

மேலும், தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கரோனா பெருந்தொற்று மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயமும் இருப்பதாக அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com